மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 தமிழ் பெண்கள் உட்பட 10 அழகிகள்.. பக்கா பிளானுடன் பாலியல் தொழில்.! சென்னையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!
சல்லாப எண்ணம் கொண்ட இளைஞர்கள், இளம் தொழிலதிபர்களை குறிவைத்து மசாஜ் சென்டர் பெயரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண்மணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 10 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
சென்னை நகரில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு, மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் செய்யப்பட்டு வரும் ஸ்பாவில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் இரகசிய விசாரணையில் இறங்கி, வாடிக்கையாளர் போல ஒருவரை ஏற்பாடு செய்து மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவது உறுதியாகவே, துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் மசாஜ் சென்டருக்குள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், மசாஜ் சென்டரில் 10 அழகிகள் இருந்த நிலையில், இவர்களில் 8 பேர் தமிழ் பெண்கள் என்பது தெரியவந்தது. பிற 2 பேரும் மும்பையை சார்ந்தவர்கள்.
10 பெண்களையும் மசாஜ் அழகியாக வாடிக்கையாளருக்கு அறிமுகம் செய்து, இவர்களில் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் அழகியுடன் மசாஜ்க்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் அம்பலமானது. மசாஜ் சென்டரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதனை நடத்தி வந்த நந்தினி என்ற பெண்ணை கைது செய்தனர்.
மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த கணேஷ், மதி என்பவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், 10 அழகிகளும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மசாஜ் சென்டரில் அழகிகளிடம் உல்லாசமாக இருக்க ரூ.1,500 முதல் ரூ.5,000 வரை பேக்கேஜ் முறையில் பணம் வசூல் செய்யப்பட்டதும் அம்பலமானது.
செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நிர்வாகிகள், 3 பெண்கள் மசாஜ் செய்வார்கள் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலை நடத்தி வந்ததும், இளைஞர்களை பெரும்பாலும் குறிவைத்து இத்தொழில் நடந்து வந்ததும் அம்பலமானது. மேலும், சல்லாப எண்ணம் கொண்ட இளைஞர்கள், இளம் தொழில் அதிபர்கள் போன்றோரும் இப்படியான செயலில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.