மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதியில் இருந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல்; செல்போனை தவறவிட்டு மீட்க வரும்போது சிக்கிய காமுகன்.!
சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் தனியார் விடுதியானது செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு இரவு நேரங்களில் மர்ம நபர் வந்து, அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி செல்வது நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்றும் இளைஞன் பெண்களுக்கு தொல்லை கொடுக்க வந்திருந்த நிலையில், தனது செல்போனை தவறவிட்டு சென்றுள்ளான். இதனை எடுக்க கயவன் வருவான் என்று பெண்களும் சுதாரிப்புடன் காத்திருந்துள்ளனர். அந்த சமயத்தில், இளைஞன் செல்போனை எடுப்பதற்காக வரவே, தயாராக இருந்த பெண்கள் அவனை மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர், காவல் நிலையத்தில் அவன் ஒப்படைக்கப்பட்டான். இளைஞனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 22) என்பதை உறுதி செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டான்.