திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"மாணவனின் பிறப்புறுப்பை நசுக்கி, வாயில் கேவல செயல்".. 10ம் வகுப்பு மாணவனுக்கு 10 பேர் கொண்ட மாணவர்கள் அதிர்ச்சி செயல்.!
10ம் வகுப்பு மாணவனின் அந்தரங்க உறுப்பை நசுக்கி 10 மாணவர்கள் குழுவாக அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பயங்கரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கே.கே நகர் நடேசன் சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐநூற்றுக்கும் அதிகமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 21ம் தேதி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்த பவுன்ராஜ் என்பவர் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், "கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எனது மகன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவனுக்கு, தன்னுடன் பயின்று வரும் மாணவரோடு கடந்த மாதம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அவனை அடித்து இருக்கின்றனர். அதுகுறித்து அறிந்த நான் பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். அவர்கள் மாணவர்களை கண்டித்தனர்.
இதன்பிறகு, எனது மகன் பள்ளிக்கு சென்ற நிலையில், 10 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து "எங்களைப்பற்றி ஆசிரியர்களிடம் புகார் கொடுக்கிறாயா?" என கேள்வி எழுப்பி மகனின் பிறப்புறுப்பை கையால் கசக்கி வயிற்றால் எட்டி உதைத்துள்ளனர். மகனின் வாயில் அசிங்கமான செயலை செய்து துன்புறுத்தி இருக்கின்றனர்.
மாணவர்கள் செய்த கொடுமையால் மகனின் உடல்நிலை கேள்விக்குறியாக, அவனை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளேன். பள்ளி மாணவர்களின் ராகிங் செயலுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடபழனி காவல் ஆணையர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 10 மாணவர்களிடமும் ரகசிய விசாரணை நடைபெற்றது.