கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#BigNews: சென்னை மக்களே இந்த உப்பு பாக்கெட் உபயோகம் செய்கிறீர்களா? மூளை வளர்ச்சி இருக்காதாம் : உங்களுக்குத்தான் எச்சரிக்கை.. சுதாரிச்சிக்கோங்க..!
கோயம்பேடு பகுதியில் சமையலுக்கு பயன்படுத்த இயலாத 13 டன் உப்புகளை வைத்திருந்ததாக புகார் எழுந்து, உணவுப்பாதுகாப்புத்துறையினர் உப்புகளை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள கோயம்பேடு குடோனில் அதிகளவு உப்பு கையிருப்பு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அளவுக்கு அதிகமான உப்புகள் (STAR Salt) கையிருப்பில் இருந்துள்ளது. இவை அனைத்தும் உணவு பயன்பாட்டிற்கு உகந்த உப்புகள் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் உப்புகளை எந்தெந்த விநியோகிஸ்தர்கள் மூலம் எங்கெங்கு விற்பனை செய்துள்ளனர் என்ற விபரங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அந்த தகவல் கிடைத்ததும் உப்பு சமையல் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது தொழிற்சாலை உபயோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதா? என்ற விபரம் உறுதியாகும்.
இந்த உப்புகளில் அயோடின் இல்லாத காரணத்தால், இவ்வகை உப்புகள் உடல் நலத்திற்கு தீங்கானது என்று எச்சரித்துள்ள அதிகாரிகள், இதனை சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு, கருவில் உள்ள குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது என்றும் கூறுகின்றனர். உப்பில் குறிப்பிட்ட அளவு அயோடின் இருந்தால் மட்டுமே முற்காலத்தில் மக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இயலும் என்றும் கூறுகின்றனர்.
உப்பு இருந்தது மளிகைக்கடை அருகில் என்பதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமாக 13 டன் உப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வைத்துள்ள உப்பு சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு ஆகும். குற்றம் உறுதியாகும் பட்சத்தில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு உண்மையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு சென்றிருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட 13 டன் உப்பும் திருப்பி வழங்கப்படும்.