மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயற்சி.. எக்ஸ்பிரஸ் இரயில் மோதி புகைப்பட கலைஞர் பரிதாப சாவு.!
நண்பரை பார்க்க சென்றபோது அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த புகைப்பட கலைஞர், அதிவிரைவு இரயில் மோதி பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள மாம்பலம், தனகோடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது நண்பரை பார்ப்பதற்காக மாம்பலம் இரயில் நிலைய தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற விரைவு இரயில் மோதியதில், அய்யனார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக மாம்பலம் இரயில்வே காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரயில் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலத்தை மக்கள் உபயோகம் செய்யவேண்டும். அலட்சியம் நமது உயிரை பறிக்கும். கவனமாக செயல்படவும்.