மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலையில்லா உடலாக மீட்கப்பட்ட திமுக பிரமுகர்.. தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கு.. நடந்தது பயங்கரம்.!!
மணலி திமுக பிரமுகர் கொலை வழக்கில் அவரின் தலை இறுதி வரை கிடைக்காததால் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 65). இவர் திமுக பிரமுகர் ஆவர். மேலும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை ராயபுரம் 3 ஆவது தெருவை சேர்ந்த தமீம் பானு (வயது 40) என்ற பெண்ணின் வீட்டில் சக்கரபாணி மே மாதம் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரின் உடல் பாகம் மூட்டைபோல கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
தலைபாகம் மட்டும் இன்றுவரை காணவில்லை. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி தமீம் பானு (வயது 40), அவரின் சகோதரர் வாஷிம் பாஷா (வயது 38), டில்லி பாபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில் அடையாறு ஆற்றில் சக்கரபாணியின் தலை வீசப்பட்டது உறுதியாகவே, காவல் துறையினர் தலையை தேடி வந்தனர். இவரின் தலை இறுதி வரை கிடைக்காததால், 51 நாட்கள் கடந்ததை தொடர்ந்து சக்கரபாணியின் உடல் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.