மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நின்றுகொண்டிருந்த லாரி மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.!
சென்னையில் உள்ள பூந்தமல்லி, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 ஓட்டுனர்கள் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டத்தில் வசித்து வந்தவர் தாமோதரன் (வயது 48). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தேனியில் இருந்து டிரைலர் கனரக லாரியில் கிரேனை ஏற்றிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பூந்தமல்லி வழியே பயணம் செய்துகொண்டு இருந்துள்ளார்.
பூந்தமல்லி சென்னீர்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 44), தாமோதரனின் நண்பர் ஆவார். இவர் மெட்ரோ இரயில் பணியில் தொழிலாளியாக இருக்கிறார். தாமோதரன் சென்னை வழியாக சென்றால் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம். அதனைப்போல தற்போதும் இருவரும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.
வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் சென்றுகொண்டு இருந்த தாமோதரன், இரவு 11 மணியளவில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு நண்பர் ராஜ்குமாருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி, தாமோதரனின் லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், தாமோதரன் மற்றும் ராஜ்குமார், டிப்பர் லாரியின் ஓட்டுநர் முருகேசன் (வயது 37) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.