சென்னையை பதறவைத்த பழைய கொலைகள் லிஸ்ட் ரெடி.. தூசிதட்டி தூக்கும் சென்னை காவல்துறை.. சிக்கப்போகும் குற்றவாளிகள்.!



Chennai Police Get Ready to Action Complete Old Cases

 

20 ஆண்டுகளை கடந்தும் துப்பு துளங்காத வழக்குகளை தூசி தட்டியுள்ள சென்னை மாநகர காவல்துறை, அதன் கொலையாளிகளை கைது செய்ய சிறப்பு தனிப்படை பிரிவை அமைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் துப்பு தொடங்க இயலாமல் இருக்கும் கொலை வழக்கை விசாரணை செய்ய மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு இருக்கிறார். இதன்பேரில், 10 ஆண்டுகளாக எவ்வித துப்பும் இல்லாமல் இருக்கும் வழக்கை விசாரணை செய்ய சிறப்பு காவல் துப்பறியும் படையும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இச்சிறப்பு படையில் இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டு, துப்பறியும் திறன் கொண்டவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு படையில் சேர்க்கப்படவுள்ளனர். இவர்களின் மூலமாக கிடப்பில் உள்ள 30 வழக்குகளை விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த படையில் உள்ள அதிகாரிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை உயர் அதிகாரிகளால் வழக்குகள் நிலை தொடர்பாக அறிக்கை அளிப்பதை உறுதி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2011 வரையில் 6 பெண்களுடைய கொலை விவகாரத்தில் எவ்வித துப்பும் இல்லாமல் மர்ம கொலைகளாக இருக்கின்றன. 

chennai police

கடந்த 2004ம் ஆண்டு கே.கே நகரில் புள்ளியியல் துறையில் பணியாற்றி வரும் நபரின் மனைவி பரிமளம் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த நகை உட்பட பல பொருட்கள் திருடி செல்லப்பட்டன. இந்த வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. 

கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் வேக்கப் மேரி - வேக்கப் தம்பதிகள் கொலை செய்யப்பட்டு இன்று வரை துப்பு கிடைக்கவில்லை. கடந்த 2011 அக். மாதத்தில் கோடம்பாக்கம் பகுதியில் மூதாட்டி என்ற பரமேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்கவில்லை. அதேபோல், அதே மாதத்தில் துணை நடிகை ஆதிலட்சுமியும் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். 

கடந்த 2011 நவம்பரில் கே.கே நகரில் வசித்து வந்த ரஞ்சிதா என்ற பெண்மணியும் கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது. 2013 ல் பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த சுமதி என்ற பெண்மணியும் கொலை செய்யப்பட்டார். இப்படியாக பல வழக்குகளில் மேற்கூறியவை முக்கியமாக கவனிக்கப்படுகிறது.