மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா குடுக்கிகள் அட்டகாசம்.. போலீசில் புகாரளித்தும் பயனில்லை.. பொறுமையை இழந்த கிராமமக்கள் என்ன செய்துள்ளார்கள் பாருங்க?.!
சென்னையில் உள்ள ஆவடி அடுத்த திருநின்றவூர், பாக்கம் அருகே உள்ள புலியூர் கண்டிகை கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு தற்போது கஞ்சா ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அவ்வப்போது கஞ்சா போதையில் மக்களிடம் ரகளை செய்வது, வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, சாலையில் செல்வோரை தாக்குவது என்று இந்த கும்பல் கிராமத்தில் அட்டகாசம் செய்துவந்துள்ளது. மேலும் பெண்களிடம் அத்துமீறுவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபடவே, சாலைமறியல் போராட்டம் நடந்ததால் வழியே வந்த வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.