திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மழையின் போது சிறுநீர் கழித்ததால் துயரம்.. மின்சார தாக்குதலுக்குள்ளான வடமாநில தொழிலாளி.! சென்னை வெள்ளத்தில் சோகம்.!!
தலைநகர் சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவில் கரையை கடந்து வருகிறது. புயலின் காரணமாக சென்னை மாநகரில் எட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளியான மிதுன் முர்மு கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் மழை பெய்யும் போது இயற்கை உபாதையை கழித்ததாக தெரிய வருகிறது. சிறுநீர் கழிக்கும் போது எதிர்பாராதவிதமாக மின்சார தாக்குதலுக்கு உள்ளாகவே, அங்கேயே படுகாயமடைந்து விழுந்திருக்கிறார்.
இதனையடுத்து அவரை மீட்ட சக நண்பர்கள் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.