மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை சென்னையில் உள்ள பள்ளிகள் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய மாண்டஸ் புயல், கடந்த வாரத்தில் மாமல்லபுரத்தை கடந்து சென்றது. இதனால் திருவள்ளூர், மாமல்லபுரம், சென்னை பகுதிகள் அதிகளவு பாதிக்கப்பட்டன. போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
புயலின் போது பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் & கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன. அதனை ஈடு செய்ய பிற சனிக்கிழமைகளில் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஆலோசனை செய்து பள்ளிகளை நடத்த ஆணையிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பள்ளிகள் வெள்ளிக்கிழமை கால அட்டவணைப்படி நாளைய சனிக்கிழமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் அடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.