மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிக்னலை மதிக்காமல் வந்து டிராபிக் ஜாம்.. பெண் காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசிய கயவன் அதிரடி கைது.!
போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வந்து நடுரோட்டில் பெண் காவலரை ஒருமையில் திட்டிய காமுகன் கைது செய்யப்பட்டான்.
சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில், ஆயுதப்படை பெண் காவலர் அபர்ணா (வயது 28) நேற்று பணியில் இருந்துள்ளார். இருசக்கர வானத்தில் அவ்வழியே வந்த இளைஞர், சிவப்பு நிற சிக்னல் விழுந்த பின்னர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். சாலையை கடக்க தயாராக இருந்த வாகனங்கள், பச்சை சிக்னல் கிடைத்ததும் முன்னேறி வந்ததால், இளைஞர் சாலையின் நடுவே சிக்கியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, பணியில் இருந்த அபர்ணா எதற்காக சிக்னல் விழுந்ததும் சாலையை கடக்கிறீர்கள்? சிறிது காத்திருக்கலாமே? என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், பெண் அதிகாரியை தகாத வார்த்தையால் பேசி திட்டி இருக்கிறான்.
இதனால் மனதுடைந்துபோன பெண் அதிகாரி, கயவனை பிடித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல் துறையினர் இளைஞனிடம் நடத்திய விசாரணையில், அவன் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ராம்குமாரின் மீது 3 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவனை சிறையில் அடைத்தனர்.