டைட்டாக சரக்கு போட்டு, ஓசிக்குடி ரகளை.. வழக்கறிஞரின் அட்டகாசம்.. கார் கண்ணாடிகள் உடைப்பு.!
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கோர்ட்யார்டு ஹோட்டலுக்கு வந்தவர் மதுபானம் அருந்திய நிலையில், அதிகாலை வரை அறையெடுத்து குடித்துள்ளார். பின்னர், காலையில் நான் செல்கிறேன் என்று அறையை காலிசெய்து கிளம்ப, குடித்த மதுபானம் மற்றும் அறையெடுத்து தங்கியதற்கு உள்ள பணத்தை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
அப்போது, அந்த நபர் என்னிடம் பணம் இல்லை, வரும்போது தருகிறேன் என்று கூறி செல்லவே, பணத்தை கொடுத்துவிட்டு வெளியே சொல்லுங்கள் என்று விடுதி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர் ஹோட்டல் பொருட்களை கீழே தள்ளி உடைத்து ரகளையில் ஈடுபட, சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் அவரை அறைக்குள் தள்ளி தாழிட்டுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதற்குள் கதவை உடைத்து வெளியே வந்தவர் ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 கார்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ரகளை செய்தவரை கைது செய்யவே, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடந்துள்ளது.
விசாரணையில், செஞ்சியை சேர்ந்த வழக்கறிஞர் டைட்டஸ் என்பது உறுதியாகவே, அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிமன்ற வழக்கறிஞராவும் இருந்து வந்துள்ளார். ஓசி குடிக்கு அலைந்த வழக்கறிஞர் பல்வேறு இடங்களில் இதனைப்போலவே ரகளை செய்ததும் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே, இவரின் மீது விழுப்புரம் மற்றும் செஞ்சி காவல் நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. இதனையடுத்து, டைட்டஸை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.