இந்த பிரச்சனைக்குமா கொலை?.. வாலிபர் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி.. சென்னையில் பயங்கரம்.!



Chennai Thiruvallikeni Man Murder Police Arrest 3 Aquest

இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் உள்ள திருவள்ளிக்கேணி பகுதியை சார்ந்தவர் முகமது பயாஸ் என்ற முகமது பாக்கர் (வயது 23). இவருக்கும், அதே பகுதியை சார்ந்த சிலருக்கும் இடையே கடந்த டிச. 27 ஆம் தேதி இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், டிச. 28 ஆம் தேதி முகமது பயாஸிடம் முகமது நூர்தீன், அவரது சகோதரர் காஜா மொய்தீன், அவரின் நண்பர் ரஹீம் ஹ்ரீப் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். 

மேலும், முகமது பயாஸை வாக்குவாதத்தில் போதே கத்தியால் குத்தி இருக்கின்றனர். இதனால் படுகாயமடைந்த முகமது பயாஸ் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து முகமது பயாஸின் தந்தை முகமது வாஜித் D1 திருவெல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

chennai

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது பயாஸ், சிகிச்சை பலனின்றி டிச. 28 ஆம் தேதிஏ இறந்துவிட்டார். இதனால் இவ்வழக்கு விசாரணை கொலை சம்பவமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

திருவெல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, முகமது பயாஸை கொலை செய்த முகமது நூர்தீன் (வயது 25), ரஹீம் ஷிரிப் (வயது 24), காஜா மொய்தீன் (வயது 27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டு, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.