திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்; அம்மாவை ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. இறந்தும் பார்வைகொடுத்த அன்னை.!
சென்னையில் உள்ள திருவெற்றியூர், அப்பர்சாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் அம்சவள்ளி (வயது 95). இவரின் மகன்கள் ரவி (வயது 76), அன்பழகன் (வயது 72). அம்சவள்ளி மகன், பேரன், பேத்தி, கொள்ளுப்பேர என 3 தலைமுறைகளை பார்த்துவிட்டார்.
இந்நிலையில், தொண்டுள்ளம் கொண்ட மூதாட்டி அம்சவள்ளி, தனது மரணத்திற்கு பின்னும் தான் மக்களுக்கு உதவ வேண்டும் என எண்ணியுள்ளார். தனது மரணத்திற்கு பின்னர் கண்களை தானம் செய்ய வேண்டும் எனவும் மகன்கள் மற்றும் பேரன்களிடம் கூறி இருக்கிறார்.
இதனிடையே, அம்சவள்ளி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தவே, அவரின் ஆசையை நிறைவேற்றும்பொருட்டு, அம்சவள்ளியின் மகன்கள் தனியார் கண் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு கண்களை தானமாக பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.