மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மழை நீரில் வழுக்கி லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்., பதறவைக்கும் துயரம்.!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் கிலாட். இவர் சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலிவேலை செய்து வரும் நிலையில், மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சத்தியமூர்த்தி நகர், எண்ணூர் விரைவு சாலை பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் நேற்று மதியம் மதுபோதையில் இருந்த அசோக் நிலைதடுமாறி விழுந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக துடித்துதுடித்து உயிரிழந்தார்.
பின் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அருகிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இதுகுறித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.