மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி தற்கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. கணவனின் கொடூர செயல்.. பரபரப்பு வாக்குமூலம்.!
பெண் மர்மமான முறையில் உயிரிளந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு, கணவரே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 24). இவர் கடந்த 28 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த H3 தண்டையார்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள், ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜீவிதாவின் தந்தை மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்றது. ஜீவிதாவுக்கும் - ஹரிக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாவே தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது.
இதன்பேரில் நடந்த விசாரணையில், மனைவி ஜீவிதாவை நானே கொலை செய்து தற்கொலை நாடகமாடினேன் என கணவர் ஹரி (வயது 28) வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, ஜீவிதாவின் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றிய அதிகாரிகள் ஹரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.