மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூடா நட்பு வயிற்றில் கத்தியை சொருவிய பயங்கரம்.. மக்களிடம் தர்ம அடி கிடைத்ததால் ஆத்திரம்.!
பயணியிடம் திருடி நட்பில் ஒருவன் தப்பி செல்ல, சிக்கியவனை மக்கள் வெளுத்தெடுத்த நிலையில், தன்னை எதற்காக மாட்டிவிட்டாய் என நண்பனை நட்பு கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி மாயாண்டி காலனியை சேர்ந்தவர் ரகு. இவர், நேற்று இரவு துலுக்கானம் முதல் தெருவை சேர்ந்த நண்பர் வினோத் குமார் @ பானிபூரி என்பவருடன் கஞ்சா புகைத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ரகுவின் வயிற்றில் வினோத் குமார் கத்தியால் குத்தி தப்பி சென்றுள்ளார்.
இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ரகுவை மீட்ட அவரின் சகோதரி ரூபாவதி, ஆட்டோ மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். இந்த விஷயம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்து, வழக்குப்பதிந்து வினோத் குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், ரகுவுடன் மயிலாப்பூர் பகுதியில் 12 G மாநகர பேருந்தில் வினோத் குமார் பயணம் செய்துள்ளார். ரகு பயணியின் பர்ஸை திருடி தப்பி சென்ற நிலையில், அவருடன் சென்ற வினோத் குமாருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
இதனால் நண்பனிடம் தன்னை எதற்காக மக்களிடம் மாட்டிவிட்டு அடி வாங்கி கொடுத்தாய் என கஞ்சா போதையில் தகராறு ஏற்பட்டு, ரகுவுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்" கூடா நட்பு கேடு தரும்..