திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய கணவர் மின்சாரம் தாக்கி பலி; சீரியல் பல்பு உயிர்பறித்த சோகம்.!
சென்னையில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் அகஸ்டின் பால் (வயது 29). இவரின் மனைவி கீர்த்தி (வயது 25). தம்பதிகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர்.
சீரியல் பல்பு உயிர்பறித்த சோகம்
இதனிடையே, நேற்று கீர்த்தியின் பிறந்தநாள் வந்துள்ளது. மனைவியின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக சிறப்பிக்க ஆசைப்பட்ட கணவர், சீரியல் பல்பு உட்பட பல டெக்ரேசன் கொண்டு மேடையை அலங்கரித்து தயாரித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சைக்கிளில் சென்ற சிறுவனை பாய்ந்து கடித்துகுதறிய நாய்கள்; சென்னையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!
மனைவி கண்முன் சோகம்
அச்சமயம், மின்சாரத்தை பாயவிட்டவாறு சீரியல் பல்புகளை சரி செய்ததாக தெரியவருகிறது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அகஸ்டின் மனைவியின் கண்முன் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அகஸ்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 29 வயது கர்ப்பிணிக்கு அரிதிலும் அரிதான நோய்; மருத்துவர்கள் உதவியால் நலமுடன் வீடுவந்த கள்ளக்குறிச்சி பெண்.!