மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நம்ம சென்னை.. நம்ம செஸ்.! ஆவின் பால் பாக்கெட்டுகளில் அசத்தல் விளம்பரம்!!
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஒலிம்பியாட் இலச்சியான 'தம்பி' படம் மற்றும் செஸ் போர்டின் படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக துவங்கவுள்ளது. இந்த போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிறது. அதுவும் சர்வதேச அளவில் தமிழகத்தில்
நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த செஸ் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஒரு கட்டமாக இன்று விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலச்சியான தம்பி உருவ படம், செஸ் போர்டு மற்றும் இது நம்ம சென்னை நம்ம செஸ் என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரத்தின் கோபுரங்களும் அச்சடிக்கப்பட்டு சதுரங்க போட்டி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.