மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கிய திமுக தொண்டர்..!!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி, ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,இசையமைப்பாளர் இளையராஜா அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர்சா என்ற திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சருக்கு பரிசளிப்பதற்காக ஒட்டகத்தை அழைத்து வந்திருந்தார். இதற்கு முன்பு ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆடு, மாடு என அவர் முதலமைச்சருக்கு பரிசு அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒட்டகத்தை பரிசளிப்பதற்காக அழைத்து வந்துள்ளார்.