திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கன மழையால் வெள்ளம்!.. தண்ணீரில் தத்தளிக்கும் சீர்காழி!: முதல்வர் நாளை ஆய்வு..!
கனமழை காரணமாக கடலூர், சீர்காழி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சீர்காழி பகுதியயே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழியே தனித் தீவு போல் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சூரைக்காடு, திருமுல்லைவாசல், மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்ததால், சீர்காழியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவ ஒரே நாளில் 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.
இந்த மிக அதிக கனமழையால் சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக இன்று இரவு அவர் சீழ்காழி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.