திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரும்சோகம்.. மொபட் மீது கார் மோதி கோரவிபத்து.. குழந்தை உட்பட 2 பேர் துடிதுடித்து பலி..!!
மொபட் மீது கார் மோதியதில் குழந்தை உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை கீரைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுஸ்ரீ (வயது 3). தியாகராஜனின் மைத்துனர் மகேஷின் மகன் புகழேந்தி (வயது 2).
நேற்று தியாகராஜன் தனது மொபட்டில் அனுஸ்ரீ மற்றும் புகழேந்தி இருவரையும் அழைத்துக் கொண்டு வையம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அப்போது திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசு சுகாதாரநிலையம் அருகே சென்றபோது, கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மொபட்டில் சென்ற 3 பேரும் சாலையில் வேகமாக தூக்கி வீசப்பட்டதை தொடர்ந்து, தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிய 2 குழந்தைகளையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தை புகழேந்தி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுஸ்ரீக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்த இருவரது உடலையும் வையம்பட்டி காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.