#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரக்கு போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து.. ஓட்டுனரை சிறைபிடித்த மக்கள்.!
மது அருந்திவிட்டு அரசு பேருந்தை விபத்திற்குள்ளாக்கிய பேருந்து ஓட்டுநர், மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை ஓட்டுநரான ரகு என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்த நிலையில், பேருந்து துடியலூர் அருகாமையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது. இதனால் காரில் சென்றவர்கள் உடனடியாக தங்களது வாகனத்தை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, பேருந்து ஓட்டுநரிடம் சண்டையிட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த பொதுமக்கள் சென்று பார்க்கையில், அரசு பேருந்து ஓட்டுனர் மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டியது தெரியவந்துள்ளது.
இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அரசு பேருந்தை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநர் ரகுவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் முன்பே அரசு பேருந்துகளில், பல இடங்களில் விபத்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது மது அருந்திவிட்டு மீண்டும் விபத்து நடைபெற்றுள்ளதால் மக்கள் அரசு பேருந்தில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.