மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக பெண் கவுன்சிலரை வெட்டியது ஏன்?; 5 பேர் கும்பல் பரபரப்பு வாக்குமூலம்.. கஞ்சா குடிக்கிகளால் பயங்கரம்.!
மது & கஞ்சா குடிக்கிகளாக வளம் வந்தவர்களை தட்டிக்கேட்ட பெண் திமுக கவுன்சிலர் குடும்பத்தோடு கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் கோவையை பதறவைத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலுமச்சம்பட்டி, ஒளவை நகரில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரின் மனைவி சித்ரா (வயது 44). திமுக கட்சியை சேர்ந்த சித்ரா, மலுமச்சம்பட்டி ஊராட்சி கவுன்சிலர் ஆவார். தம்பதிக்கு மோகன் என்ற 24 வயது மகன் இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில், தம்பதியின் வீட்டிற்குள் வந்த 5 பேர் கும்பல் முகமூடி அணிந்து பயங்கர ஆயுதத்தோடு ரவிக்குமார், சித்ரா, மோகன் ஆகியோரை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றது.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 23), பிச்சைப்பாண்டி (வயது 23), முத்துப்பாண்டி (வயது 24), மகேஷ் கண்ணன் (வயது 22), ஸ்ரீ ரக்சித் (வயது 18) எனபதை உறுதி செய்து அனைவரையும் கைது செய்தனர்.
இவர்களில் ராஜா, பிச்சைப்பாண்டி, முத்துப்பாண்டி ஆகியோரின் மீது கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தது உறுதியானது. ஐவரிடமும் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டது.
அதற்கு அவர்கள் அளித்த பதிலாவது, "நாங்கள் ஐவரும் கவுன்சிலரின் வீட்டு பின்பக்க காலியிடத்தில் இரவு நேரத்தில் மது, கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை பயன்படுத்தி ஆரவாரம் செய்வோம். சித்ரா எங்களுக்கு எப்போதுமே இடையூறாக இருப்பார்.
அவ்வப்போது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பார். சில நேரம் மிரட்டல் தொடரும். இங்கு கஞ்சா, மது போன்றவற்றை உபயோகம் செய்யக்கூடாது என எச்சரித்தார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் வீடுபுகுந்து கொலை சம்பவத்தை அரங்கேற்ற ஐவரும் திட்டமிட்டோம். சம்பவத்தன்று கஞ்சா, மது போதை தலைகேறியதும் கவுன்சிலரின் வீட்டிற்கு சென்றோம்.
அங்கு ரவிக்குமார் முதலில் எங்களை சத்தமிட்டதால் அவரை வெட்டினோம். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சித்ரா, அவரை காப்பாற்ற வந்த மோகன் ஆகியோரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றோம்" என கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.