மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏ யானை.. நடுரோட்டில் நின்று வீடியோ எடுத்தவர்களை பதறி ஓடவைத்த ஒற்றை யானை.!
கோயம்புத்தூர் மாவட்டமும் - மேற்கு தொடர்ச்சி மலையும் ஒருங்கே இயற்கையால் சூழப்பெற்றது என்பதால், அங்குள்ள மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் வந்து செல்வது இயல்பானது.
இதனை வியப்புடன் காணும் மக்கள், விபரீதம் புரியாமல் தங்களின் செல்போனில் வீடியோ எடுப்பது, அருகில் நின்றவாறு செல்பி எடுப்பது என இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை - கணுவாய் பகுதியில் இன்று அதிகாலை ஒற்றை யானை உணவு தேடி ஊருக்குள் வந்தது.
அந்த யானையை கண்ட பல வாகன ஓட்டிகளும் தங்களின் வாகனத்தை நடுவழியில் நிறுத்தி வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென யானை அங்கிருந்து புறப்பட தொடங்கவே, பதறிப்போன மக்கள் அங்கிருந்து தங்களின் வாகனத்தில் ஏறி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.