சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
ஊதாரியா சுற்றி மாத தவணையில் இருசக்கர வாகனம் வாங்கிய மகனை கண்டித்த பெற்றோர்; விபரீத முடிவெடுத்த மகன்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கோட்டூர் கரையான் செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரின் மகன் முருகேஷ் (வயது 20). இவர் கூலித்தொழிலாளி ஆவார்.
இந்நிலையில், சரிவர வேலைகளுக்கு சென்றுவர முருகேஷ், நண்பர்களுடன் சேர்ந்து எந்த நேரமும் கிரிக்கெட் விளையாடுவது என இருந்து வந்துள்ளார். இதனால் மகனுக்கு தந்தை அறிவுரை கூறி வந்துள்ளார்.
தந்தையின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாத முருகேஷ், தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவிக்கவே, தாய்-தந்தையின் முடிவால் முருகேஷ் மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்ட முருகேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை மீட்ட உறவினர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், முருகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.