#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்பத்துடன் சென்று மெரினா கடலில் குளித்த கல்லூரி மாணவன்! சகோதர, சகோதரிகள் கண் எதிரே நடந்த பரிதாப சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பாக்கம் கிராமம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த தேவராஜ் என்பவற்றின் மகன் ஹேமநாதன் (20). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது சகோதரன் மோகன் மற்றும் அக்கா கலைவாணி, தங்கை ஜீவிதா ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு சுற்றி பார்க்க வந்துள்ளார்.
இந்தநிலையில் மெரினா கடலில் இறங்கி அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் ஹேமநாதன் சிக்கிக்கொண்டார். இதைக்கண்ட அவரது சகோதரன் மற்றும் சகோதரிகள் அலறல் சத்தம் போட்டனர்.
இதை கவனித்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உடனே ஹேமநாதனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹேமநாதன் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தனது சகோதரன் மற்றும் சகோதரிகளின் கண்எதிரேயே ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.