பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கடனை திரும்பி கேட்ட பாட்டி கொலை முயற்சி.. பேரன் பரபரப்பு செயல்.. அதிர்ச்சி சம்பவம்.!
கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக பாட்டியின் கழுத்தையறுத்து பேரன் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவரது தந்தை மற்றும் தாய் காணாமல் போன நிலையில், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்னதாக கார்த்திக்குக்கு சிறு விபத்து ஏற்பட்டதால், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவசரமாக பணம் தேவைப்படுவதாக பாட்டியிடம் கேட்க, அவர் உரிமையாளரிடம் 15 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி கொடுத்துள்ளார்.தொடர்ந்து குறிப்பிட்ட தேதியில் கார்த்திக் பணத்தை திருப்பிக் கொடுக்காததால், கார்த்திக்குடன் அவரது பாட்டி சண்டையிட்டுள்ளார். அப்போது ஆவேசமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனாவின் கழுத்தையறுத்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.