திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிவகார்த்திகேயனின் தந்தை இறப்பு குறித்த சர்ச்சை கருத்து.! ஹெச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.!
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாதான் காரணம் என்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஹெச்.ராஜா அண்மையில் கூறியிருந்தார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிவகார்த்திகேயனின் தந்தை இறப்பு குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் பொய்யான கருத்துகளை பரப்பிவருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவதூறு கருத்துகளை பரப்பிவிட்டு மன்னிப்பு கோருவதை ஹெச்.ராஜா வழக்கமாக கொண்டுள்ளதாகவும், எனவே இந்தமுறை மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஹெச்.ராஜா மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜவாகிருல்லா மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறு பரப்பும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.