கொரோனாவுக்காக சினிமாவின் முன்னணி பிரபலங்களும், சீரியல் பிரபலங்களும் ஒரே பாடலில் அசத்தல்! வைரல் வீடியோ!



corona awarness song

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர். 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்களின் மெட்டிலேயே பல பாடல்கள் வெளி வந்துள்ளன. அண்மையில் கூட வைரமுத்து வரிகளில் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் மெட்டில் பாடியிருந்தார். அந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல் சென்னை காவல் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாகப் பணியாற்றும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களைப் பாராட்டி “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம்”என்ற பாடலை திருநாவுக்கரசு எழுதிப் பாடியுள்ளார். அந்த பாடலும் வைரலானது.

இந்தநிலையில், சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் சீரியல் நடிகைகள் என பலரும் இணைந்து கொரோனா விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் உள்ள ஒவ்வரு வரிகளும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது என தன்னார்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.