மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆவடியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா! 3 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலே சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் இருந்து அதிகமாக பரவி வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் சென்னையில் 1,149 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் மொத்தம் 22,136 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், ஆவடி மாநகராட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இதனால் ஆவடியில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 282-ஆக அதிகரித்துள்ளது.