மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பக்கவாட்டு கம்பியில் தொங்கியபடி பயணம்; போதை இளைஞரை ஊர்-ஊராக தேடி ஓட்டுநர்-நடத்துனர் செய்த அதிரடி சம்பவம்.!
கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 05:30 மணியளவில் சென்ற தனியார் பேருந்து ஒன்றின் பக்கவாட்டு ஏணியில் தொங்கியபடி மதுபோதை இளைஞர் ஒருவர் நேற்று பயணம் செய்தார்.
இந்த விஷயம் குறித்த காணொளி காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, பேருந்தின் உரிமையாளர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
போதையில் அட்ராசிட்டி
தாங்கள் செய்யாத குற்றத்திற்கு எப்படி பணிநீக்கம் செய்யலாம் என ஆதங்கப்பட்டு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், குடிபோதை இளைஞரை ஊர்-ஊராக சுற்றித்திரிந்து தேடிப்பிடித்தனர்.
இதையும் படிங்க: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!
பின் இளைஞரை கண்டித்த நிலையில், அவர் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன். மதுபோதையில் நடத்துனரின் எச்சரிக்கையை மீறி அவ்வாறு செயல்பட்டேன்.
மானஸ்தன் மன்னிப்பு கேட்டார்
அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. என்னை அடுத்து வந்த அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் கண்டித்து இறக்கிவிட்டு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது என அந்த இளைஞர் கூறி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை & புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிவிப்பு; விபரம் இதோ.!