Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
வளைகாப்பு நடத்த வற்புறுத்திய 18 வயது நிறைமாத காதல் மனைவி அடித்தே கொலை : காதல் கணவன் வெறிச்செயல்..!
காதல் திருமணம் செய்த 4 மாதங்களுக்குள் 7 மாத கர்ப்பிணியான 18 வயது சிறுமியை கொலை செய்த கணவனின் செயல் அதிரவைத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவடவாடி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரின் மகன் அற்புதராஜ் (வயது 20). விருத்தாசலத்தில் வசித்து வருபவர் லதா. இவரின் மகள் சக்தி (வயது 18). அற்புதராஜுக்கும் - சக்திக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே, கடந்த ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சக்தி, தனது தாயார் லதாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவர் தனக்கு கணவர் சார்பில் வளைகாப்பு நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
தனது விருப்பத்தை காதல் கணவரிடம் அன்புடன் தெரிவிக்க, அற்புதராஜோ கடனை மேற்கோள்காண்பித்து பேசி வளைகாப்பு நடத்த இயலாது என தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து நேற்று இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அற்புதராஜ் காதல் மனைவி சக்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் நிறைமாத கர்ப்பிணியான சக்தி பரிதாபமாக துடிதுடிக்க நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் அற்புதராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. 18 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்த கணவன் 7 மாதத்தில் அவரை கொலை செய்த பயங்கரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.