திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: அன்புமணி ராமதாஸ் உட்பட பாமகவினர் கைது; காவல்துறை - பாமக தள்ளுமுள்ளு.. பேருந்து கண்ணாடி உடைப்பு.! நெய்வேலியில் பதற்றம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை, விவசாய நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு தலைமையில் என்.எல்.சி முதன்மை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், முற்றுகை போராட்டமும் நடைபெற்றது.
அப்போது, முற்றுகை போராட்டம் எல்லைமீறி செல்ல வாய்ப்புகள் இருந்ததால், காவல் துறையினர் கலவர தடுப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
முற்றுகை போராட்டம் தொடர்ந்ததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு உட்பட பாட்டாளி மக்கள் கட்சியினர் காவல் துறையினரின் வாகனங்களில் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்ய வந்த காவல்துறை பேருந்து கண்ணாடியும் உடைக்கப்பட்டது.