மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணாடம்: மாணவர்களுக்குள்ளான தகராறு இருதரப்பு மோதலானதால் பதற்றம்; 3 எஸ்.ஐ உட்பட 13 பேர் கல்வீச்சு தாக்குதலில் காயம்.!
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் இருதரப்பு சண்டையானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம், துறையூர் காலனியில் வசித்து வருபவர் ராஜா. துறையூரை அடுத்துள்ள முருகன்குடியில் வசித்து வருபவர் நசின்ராஜ்.
இவர்கள் இருவரும் கூவத்தூரை அடுத்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் இருவரும் தங்கள் தரப்பு ஆட்களை சேர்த்துக்கொண்டு பிரச்சனையை பெரிதாக்கவே, கல்வீசி பயங்கர சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையை அறிந்து பாதுகாப்புக்கு சென்ற காவலர்களும் கல்லடி வாங்கியுள்ளனர்.
மொத்தமாக இருதரப்பு மோதலில் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.