ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தமிழகமே அதிர்ச்சி.. பள்ளி வகுப்பறைக்குள் 12 ஆம் வகுப்பு மாணவன் - மாணவி விபரீத முடிவு..! பகீர் சம்பவம்.!
அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் மாணவ - மாணவியான காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராமாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவி - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். இதில், பள்ளியில் பயின்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் வைத்து திடீரென விஷத்தை குடித்து தனது புத்தகப் பையில் வைத்துள்ளார்.
இதனைக்கண்ட மாணவி ஒருவர், தானும் அந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இந்த தகவல் தலைமை ஆசிரியருக்கு தெரியப்படுத்தவே, உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, பள்ளிக்கு வந்த காவல் துறையினர் மாணவன் - மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடந்த விசாரணையில், மாணவன் - மாணவி இருவரும் காதல் வயப்பட்டு இருந்துள்ளனர். மாணவிக்கு தோல் நோய்ப்பிரச்சனை இருந்த நிலையில், அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவும் எண்ணியுள்ளார். இதனை காதலனிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.
காதலியின் மனத்துயரை அறிந்து வருத்தமுற்ற மாணவன், காதலி இறப்பதற்கு முன் தான் இறக்க வேண்டும் என நினைத்து வகுப்பறைக்குள் வைத்து விஷம் குடித்துள்ளார். காதலன் விஷம் குடிதத்தை கண்ட காதலியும் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.