பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
துரோகத்தால் குத்திய உறவினர் பெண்; மனமுடைந்து தூக்கில் சடலமாக தொங்கிய இளைஞர்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கூத்தப்பன் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த பணம் கொண்டு சொந்த வீடுகட்டி குடியேறிய நிலையில், கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் உறவினர் பெண்ணுக்கு வீட்டை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
வீட்டை வாங்கிய உறவுக்கார பெண்மணி கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த விஜயகுமார், தான் உறவினர் பெண்ணை நம்பி ஏமார்ந்துவிட்டேனே என வருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.