மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Accident: வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கையில் சோகம்; வேனின் டயர் வெடித்து விபத்து.. 20 பேர் காயம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று வேன் சென்று கொண்டு இருந்தது. வளைகாப்பு இல்லத்திற்கு தங்களின் உறவினர்களுடன் 30 பேர் வேனில் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், வாகனம் வேப்பூர் அருகே சென்றபோது, வேனின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்தனர். காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.