மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Accident: இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பலி, 8 பேர் படுகாயம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், விளாங்காட்டூர் பகுதியில் இன்று கோர விபத்து நடந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு நகரை சேர்ந்த குடும்பத்தினர் சிதம்பரம் நோக்கி காரில் பயணம் செய்துகொண்டு இருந்துள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு கார் பயணம் செய்துள்ளது.
இந்த இரண்டு வாகனங்களும் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த விளாங்காட்டூர் பகுதியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த வைரவன் என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இரண்டு வாகனத்திலும் பயணம் செய்த 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.