மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாய நகைக்கடன் தள்ளுபடிக்கு ரகரகமாக இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள்.. போஸ்டர் அடுத்து பதறவைத்த மக்கள்.!
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு அதிகாரிகள் விதவிதமாக இலஞ்சம் வாங்கி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், சின்னபண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் அங்குள்ள 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்து வருகின்றனர். இதன் மூலமாக மானிய விலையில் உரம், யூரியா மற்றும் விவசாய பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும், பயிர்க்கடன், கரும்புக்கடன் மற்றும் விவசாய நகைக்கடனும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அறிவித்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்றபின்னர் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேற்கூறிய சங்கத்தில் நகைக்கடன் பெற்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக முறையிட சென்றால், நகைக்கடன் தள்ளுபடிக்கு இலஞ்சம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000, பயிர்கடன் தள்ளுபடிக்கு ரூ.3000 என ரகரகமாக விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெறுகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதே சங்கத்தில் மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், ஏலம் விடுவதில் முறைகேடு நடந்ததாகவும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.