மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து; 20 மாணவர்கள் படுகாயம்... வேன் ஓட்டுனர்கள் போட்டா போட்டியால் துயரம்.!
வேன் ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட போட்டா போட்டி காரணமாக, வேன் விபத்திற்குள்ளாகி 20 மாணவர்கள் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், பெண்ணாடத்தை அடுத்த கம்மாபுரம் கோபாலபுரம் பகுதியில் ஜெயப்பிரியா தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
மாணவர்களை பள்ளியின் வேன், பேருந்து மூலமாக தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வது, மீண்டும் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவது சேவையை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், இன்று விருத்தாசலத்தில் இருந்து மாணவர்களை ஏற்றி வந்த 2 பள்ளி வேன் ஓட்டுனர்களுக்கு இடையே போட்டி நடந்துள்ளது.
முதலில் பள்ளிக்கு யார் செல்வது? என்று நடந்த போட்டா போட்டியில், இரு வாகனமும் அதிவேகத்தில் பயணம் செய்துள்ளது. அப்போது, கோ.மாவிடந்தல் கிராமம் அருகே ஒரு வேன் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் காயமடைந்து அலறித்துடித்தனர்.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளி நிர்வாகத்தினர், மற்றொரு வேன் மூலமாக காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அழைத்து சென்றுள்ளனர். பல மாணவர்களின் கை-கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.