மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கு முயன்ற சிறுமி.. தமிழகமே அதிர்ச்சி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவி, நேற்று முன்தினம் காலை நேரத்தில் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சிறுமியின் இடுப்பு எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்ட நிலையில், உடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையின் போது, குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்றேன் என தயங்கியது போல் தெரிவித்துள்ளார். இதனால் சிறுமி எதையோ மறைப்பதாக உணர்ந்த காவல் துறையினர், பெற்றோர்களிடம் கூறி விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
அப்போது, பள்ளியில் விலங்கியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வரும் வேப்பூர், வண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் சாமிநாதன் (வயது 32), கடந்த ஒருமாதமாக சிறுமிக்கு செல்போன் மூலமாக ஆபாசமாக பேசி வந்ததும், கடந்த 4 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்ததும் அம்பலமானது. பெற்றோரிடம் கூறினால் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவார்களோ? என்ற பயத்தில் சிறுமி அமைதியாக இருந்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு மனஉளைச்சல் ஏற்படவே, அவர் பள்ளியில் பயின்று வரும் சக தோழிகளிடம் தகவலை கூறி கதறி அழுதுள்ளார். அவர்களும் சிறுமிக்கு ஆறுதல் கூறி, அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யலாம் என்று கூறியுள்ளனர். இதற்குள்ளாக விரக்தியில் இருந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
சிறுமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, ஆசிரியர் சாமிநாதனை போக்ஸோவில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் விருத்தாச்சலம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.