திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. கவலையில் பயனர்கள்..!!
இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாதம் ஒருமுறை வணிக மற்றும் சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் தற்போது ஜூலை மாதத்திற்கான சிலிண்டர் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.8 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1937 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.8 உயர்ந்து 1945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் வீட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி ரூ.1118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு வணிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.