திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை.! கடும் அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் கடந்த 1ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு சிலிண்டரும் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.