திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இப்டி பண்றீங்களே... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவால் பலர் வேலையை இழந்து அன்றாட வாழ்விற்க்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கொரோனா சமயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்தநிலையில் தற்போது சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.850.50 இல் இருந்து 875.50ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.