திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigBreaking: சமையல் எரிவாயு விலை அதிரடி குறைவு..! விலையின் விவரங்கள் இதோ..!!
இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் விலையானது அதன் விற்பனை நிறுவனங்களால் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளாகவே கேஸ் சிலிண்டரின் விலை மாதாமாதம் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
அவ்வப்போது சிறிது ஏற்ற இறக்கமும் காணப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்து ரூ.2192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் இது ரூ.2268-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.