சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
குளிக்கும் போது தினமும் அப்படி செய்றீங்களா?.. இப்படி செய்தால் உடலும், மனமும் நலம்பெறும்.!
அன்றாட வாழ்க்கையில் எதோ ஒரு காரணத்திற்காக ஒரு வேலை உணவை சாப்பிடாமல் இருந்தாலும், குளிக்க பெரும்பாலானோர் மறந்தது இல்லை. குளிக்க தொடங்கும் போது, முதலில் தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்றி குளிப்பது தவறான செயல் ஆகும். இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான இல்லங்களில் ஷவர் வைக்கும் நிலை வந்துவிட்ட நிலையில், நேரடியாக தலையில் நீரை ஊற்றி குளிப்பது உடலுக்கு தீங்கானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிக்கும் போது முதலில் நீரினை உச்சந்தலையில் தெளித்து, கால்களில் தண்ணீரை ஊற்றின் அறைவெப்ப நிலையை நமது மூளைக்கு சமிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். அதனைத்தொடர்ந்து, இரண்டு உள்ளங்கைகளிலும் நீரினை ஊற்றினால், அது வெப்பநிலையை நமது மூளைக்கு உணர்த்தும். பின்னர், தொடை வரை நீரை ஊற்றி, மார்பு வரை நீரை ஊற்றி என தலைக்கு வர வேண்டும். இவ்வாறு குளிக்கும் பட்சத்திலேயே உடலின் வெப்பம் காது, கண்கள் வழியே வெளியேறும். தொடக்கத்திலேயே தலை, தோள்களில் நீரை ஊற்றினால், உடலின் வெப்பம் வெளியேறாது.
நாம் குளிப்பது உடலின் வெப்பத்தை குளிர்விக்கும், உடலில் உள்ள அழுக்குகளை வெயியேற்றவும் தான். குளிர்ந்த நீரில் குளிக்கும் பட்சத்தில், உடலின் வெப்பம் வெளியேற்றப்படும். குளிப்பதற்கு முன்னதாக வாயில் நீரை நிரப்பி, அதனை குளித்து முடித்ததும் துப்பிவந்தால் நுரையீரலுக்கு நன்மை ஏற்படும். வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் நலம். நல்லெண்ணெயை மிதமான சூடாக்கி, அதில் தோல் நீக்கிய இஞ்சி, மிளகு சேர்த்து ஆற்றி, அந்த எண்ணெயை தேய்த்து, மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும்.
தினமும் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு பிற வேலைகளை தொடங்கினால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். சாப்பிட்டுவிட்டு குளிக்க கூடாது. எந்த காலகட்டத்திலும் அவசர குளியல் என்பது கூடவே கூடாது. அதிலும், சூடான நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அவசர குளியலை எடுத்துக்கொண்டால், அவை உடல் நலத்திற்கும் கேடினை ஏற்படுத்தும்.