மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! உயிர் நண்பனை கொலை செய்துவிட்டு ஒன்றும் அறியாதது போல் இருந்த சக நண்பர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்கோட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான வெங்கடேசன் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கடேசன் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி விசாரித்துள்ளனர். இதையடுத்து வெங்கடேசின் நண்பர்களால் வாட்ஸ் அப்பிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் சிலர் வெங்கடேசனை சர மாறியாக தாக்கும் காட்சிகள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசனின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 11 தேதி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெங்கடேசன் உட்பட அவரது நண்பர்கள் 6 பேர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசன் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இதனை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். மேலும் சடலத்தை அங்கேயே புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்த வெங்கடேசனின் நண்பர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.