ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி: சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்!!
தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் என்பது வேகமாகவும், எளிமையாகவும் பரவ கூடிய ஒரு நோய். இந்த நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி கொசுக்கள் பெருகுவதை தடுப்பது தான்.
கொசுக்களை தடுப்பது என்பது அதனை இனப்பெருக்கம் செய்ய விடாமல் அழிப்பது தான். அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர்களில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது. மேலும், வீடுகளில் இருக்கும் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி இருக்கும் தண்ணீர், உரல் மற்றும் தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் தண்ணீர்கள் மூலமாகவும் இந்த டெங்கு கொசுவானது உயிர் பெறுகிறது.
இதன் விளைவாக சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுதலை தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் தூய்மை இல்லா சூழ்நிலைகள் இருந்தால், உரிமையாளர்களுக்கு ரூபாய் 100 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.